Friday, October 28, 2011

சண்டே லீடர் ஆசிரியர் பிரட்றிகா ஜேன்ஸ்சுக்கு கொலை அச்சுறுத்தல்

சண்டே பத்திரிகையின் பிரதம ஆசிரியரான பிரட்றிகா ஜேன்ஸ் தனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மீரிஹானை பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தனக்கு அனுப்பிய வைக்கப்பட்டுள்ளநான்கு பக்க கடிதம் ஒன்றின் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் நேற்றிரவு மீரிஹான பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு பாதகமான முறையில் வெள்ளைக் கொடி விவகார வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டால் தன்னை கொலை செய்வதாக சிங்கள மொழியில் இந்த அச்சுறுத்தல் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் பிரட்றிகா ஜேன்ஸ் தெரிவித்துள்ளார்.வெள்ளைக் கொடி வழக்கில் பொய் சாட்சி சொன்னதாகவும் சரத் பொன்சேகாவிற்கு 57 தடவைகள் நீதிமன்றில் ஆஜராக வேண்டி ஏற்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரட்றிகா ஜேன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் வெள்ளைக் கொடி விவகார வழக்கில் இவர் பிரதான சாட்சியாவார்.இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 18 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment