கிண்ணியாவில் திண்மக்கழிவு அகற்றல் பிரச்சினைக்கு தீர்வு
திண்மக்கழிவுகளை அகற்றுவதில் கிண்ணியா நகரசபை பல்வேறு சிக்கல்களை முகம்கெடுத்து வருகின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்காக கிண்ணியா நகரசபை தலைவர் டாக்டர். ஹில்மி மஃருப் மேற்கொண்ட முயற்சியின் பயனாக உள்ளுராட்சி அமைச்சு திண்மக்கழிவுகளை அகற்றுவதற்காக 11 மில்லியன் ருபா நிதியை ஒதுக்கியுள்ளது.
இதற்கான வேலைத்திட்டத்தினை கிண்ணியாவின் பைசல் நகரில் உள்ள சின்னத்தோட்டம் பகுதியில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முலம் கழிவுகல் அகற்றப்படுவதோடு நகரசபைக்கு மேலதிக வருமானம் கிடைப்பதற்கான வழி பிறந்துள்ளதாக நகரசபை தலைவர் தெரிவித்தார்.
இதேநேரம் கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் உலக கை கழுவல் தினம் நேற்று திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. கிண்ணியா அல்-அக்தாப் வித்தியாலயத்தில் அதிபர் தலைமையில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எம்.அப்துல்லாஹ் மற்றும் கிண்ணியா கோட்டக் கல்வி அதிகாரி கே.ஏ.எம். அஹது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment