Sunday, October 16, 2011

பாதாள உலகத்தினர் தப்பியோடியதால் போதைப் பொருளுக்கு தட்டுப்பாடு

ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலையுடன்தொடர்படைய பாதாள உலக முக்கியஸ்தர்கள் தமது இருப்பிடங்களை விட்டு, தப்பியோடியுள்ளதால், கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடியுள்ள இவர்கள் பாரியளவில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என பொலிஸாருக்குதெரிய வந்துள்ளது. இவர்கள் தப்பிச் சென்றுள்ளதால் பொதைப் பொருள் விநியோகத்தில் தடையேற்பட்டு உள்ளதாகவும், இதனால் ஹெரோயின் போதைப் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொலன்னாவ, மீதொட்டுமுல்ல, பொரல்லை, தெமட்டகொட, புளுமெண்டால், மாளிகாவத்தை, ஒருகொடவத்தை, தமிழ் நாடு, முகத்துவாரம் கிம்புலாஹெல, குணசிங்கபுர ஆகிய பிரதேசங்களுக்கு செல்லும் போதைப் பொருள் பாவனையாளர்கள் போதைப் பொருளை தேடியலைவதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com