பாரத லக்ஷ்மன் கொலை சம்பவ விசாரணையை மேற்கொண்டுவந்த பொலிஸ் அதிகாரிக்கு திடீர் இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகரான சமுத்திரஜீவா என்பவரே குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவந்துள்ள நிலை யில் திடீர் கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்விட மாற்றம் தொடர்பாக இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றது. விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கில் இடம்பெற்றுள்ளதாக சில செய்திகளும் நியாயமான விசாரணைகளுக்கான திடீர் மாற்றம் என சில செய்திகளும் தெரிவிக்கின்றன.
இதேநேரம் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக படுகாயமடைந்த நிலையில் ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் துமின்த சில்வாவாவின் பெயருக்கு வைத்தியசாலை முகவரிக்கு கடிதங்களும், தபால் பார்சல்களும் அதிகளவில் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எப்படி இருந்த போதிலும் இவற்றை வைத்தியசாலையின் உத்தியோகப் பூர்வ கடிதங்கள் மற்றும் பார்சல்கள் கிடைக்கும் பிரிவிற்கு அனுப்ப வேண்டாம் என வைத்தியசாலை நிருவாகம் தபால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment