இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுத்தந்தமைக்கு நன்றி –சஜித்மோகன்
நடந்து முடிந்த நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை அளித்து என்னை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நீர்கொழும்பு மாநகர சபைக்கு மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒரே தமிழ் உறுப்பினரான சஜித்மோகன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சஜித்மோகன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஐ.தே.க.வின் சார்பில் மீண்டும் போட்டியிட்ட எனக்கு இன, மத, மொழி பேதமின்றி வாக்களித்த அனைத்து உள்ளம்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழரான எனக்கு 5472 வாக்குகள் அழிக்கப்பட்டுள்ளன இது நீர்கொழும்பு மாநகர சபையில் தமிழ் வேட்பாளர் பெற்றுக்கொண்ட அதிகூடிய விருப்பு வாக்குகளாக சாதனை படைத்துள்ளது. இந்த வாக்குகள் தமிழ் மக்களுடன் இணைந்து சகல இன மக்களும் எனக்களித்த வாக்குகளாகும். மாநகர சபையில் எதிர்கட்சியில் இருந்தாலும் எப்போதும் போலவே மக்களுக்கு சேவையாற்ற தயாராகவேயுள்ளேன் எமது கட்சியின் மீதும் என் மீதும் நம்பிக்கை வைத்து வாக்குகளை வழங்கிய நீர்கொழும்பு வாழ் சகல மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
0 comments :
Post a Comment