வவுனியாவில் புளொட் உறுப்பினர் மீது வாள்வெட்டு.
இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் புளொட் இயக்க உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு வவுனியா அரசவாடிக்கு குறிப்பிட்ட உறுப்பினர் மது அருந்தச் சென்றிருந்தபோது மோட்டார் சைக்கிள் ஒன்றில் தலைக்கவசங்கள் அணிந்து அங்கு சென்ற இருவர் இவரை வாளால் வெட்டிக்காயப்படுத்தியுள்ளனர்.
வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நபர் நெடுமாறன் என அழைக்கப்படுபவர் எனவும் கடந்தகாலங்களில் வவுனியாவில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் பலவற்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீண்டநாட்கள் அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலையான நிலையில் அவர் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment