மனைவி அமெரிக்கா செல்வதை தடுக்க குண்டு புரளியை கிளப்பிய நபர் கைது.
தன்னைவிட்டு பிரிந்து அமெரிக்கா புறப்படத்தயாராகிய மனைவியை தடுப்பதற்காக விமானத்தில் குண்டு இருப்பதாக பொய்யான அச்சுறுத்தலை விடுத்த கணவர் ஒருவர் சிறையிலிடப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. கெவின் பிளைன் (31வயது) என்பவரே தன்னைவிட்டு பிரிந்து தனது மனைவி கெரென்சா அமெரிக்கா செல்வதை தடுக்க விமானத்தில் குண்டு இருப்பதாக தொலைபேசி அழைப்பின் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
ஹீத்ரோ அல்லது கட்விக் விமானநிலையத்திலுள்ள விமானத்தில் கெரென்சா பிளைன் என்பவர் உள்ளார் அவரது கைப்பையில் குண்டு உள்ளது என கெவின் பிளைன் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
4 வருடம்களுக்கு முன் திருமண பந்தத்தில் இணைந்த இருவரும் தம்மிடையே ஏற்பட்ட பிணக்குகள் காரணமாக பிரிந்து வாழ தீர்மானித்தனர். இந்நிலையில் கெரென்சா அமெரிக்க நியூயோர்க் நகரிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பத்தயாராகியுள்ளார்.
இதனையடுத்து கெவின் பிளைன், ஹீத்ரோ மற்றும் கட்விக் விமான நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பை விடுத்து குண்டுதொடர்பான அச்சுறுத்தலை விடுத்துள்ளார். ஹீத்ரோ விமான நிலையத்தில் கெரென்ஸா இருப்பது கண்டறியப்பட்டது. அதனையடுத்து கெவின், வெஸ்டசஸக்ஸிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர்மீது பொய்யான புரளியை கிளப்பி பதற்ற நிலையை தோற்றுவித்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவருக்கு ஒருவருட சிறைத்தன்டனை விதிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment