இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட, அவுஸ்திரேலியாவுக்கு முடியாதென, அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிளார்ட் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய சட்டமா அதிபரும், இதனை வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக, அவுஸ்திரேலிய பிரஜா உரிமை உள்ள இலங்கை தமிழர் ஒருவர், அந்நாட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள யுத்த குற்றச்செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு, அரசாங்கத்தின் அங்கீகாரம் இருக்க வேண்டுமென, அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய மத்திய அரசின் அங்கீகாரமின்றி, மெல்போர்ன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டை விசாரிக்க முடியாதென்றும், அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய வானொலிக்கு அளித்த விசேட செவ்வியிலேயே, பிரதமர் கிளார்ட் இவ்வாறு தெரிவித்தார்.
இதுவரை, சட்டமா அதிபரிடம் அவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்படவில்லையென்றும், பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த குற்றச்சாட்டை சுமத்தும் தமிழர், சமர்ப்பித்துள்ள மனு, இதுவரை சட்டமா அதிபரினால் கூட ஆராயப்படவில்லையென, சட்டமா அதிபரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
...............................
No comments:
Post a Comment