Tuesday, October 4, 2011

ஆசியாவிலேயே சிறந்த பஸ்நிலையம் நீர்கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது.

கம்பஹா மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டம்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாவட்டத்தில் உள்ள நகரம்கள் முன்னேற்றமடைந்துள்ளன, ஆசியாவிலேயே மிகச்சிறந்த நவீன வசதிகளுடன் கூடிய பஸ்நிலையம் நீர்கொழும்பில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்

நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

2900இலட்சம் ரூபா செலவில் 68 கடைகளுடனும் சினிமா தியேட்டர், வரவேற்பு மண்டபத்துடனும் இரண்டு மாடிகளை கொண்டதாக இந்த பஸ் நிலையம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயரும் ,மேல்மாகாண சபை அமைச்சருமான நிமல்லான்ஸாவின் கருத்திட்டத்தில் உருவான நீர்கொழும்பு பிரதான பஸ் நிலைய திறப்பு விழாவில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம , அமைச்சர்களான மேர்வின் சில்வா, பீலிக்ஸ் பெரோ, பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே மற்றும் முக்கியஸ்தர் பலரும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பசில் ராஜபக்ச அங்கு தொட்ர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் தற்போது அச்சமும் பயமும், பீதியும் இன்றி வாழ்ந்து வருகின்றனர் தற்போது கம்பஹா மாவட்டம் பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி அடைந்து வருகிறது சகல மாவட்டம்களிலும் இதுபோன்ற பஸ் நிலையம் ஒன்றையேனும் அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் ஆலோசனை தெரிவித்து நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

எதிர்வரும் நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் எமது கட்சி வெற்றி பெற்றதன் பின்னர் நாட்டில் உல்லாச பயண துறைக்கு சிறந்த நகரமாக மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளேன் என்றார்.

மேல் மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா வரபேற்புரை நிகழ்த்துகையில் பல்வேறு சவால்களை தாண்டி அமைச்சர் பசில் ராஜபக்சவின் உதவியோடு இன்று பஸ்நிலையம் திறந்துவைக்கப்பட்டது. 11ஆயிரம் மேலதிக வாக்குகளால் இந்த முறை நடைபெறவுள்ள நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம் என்றார்.

போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம உரையாற்றுகையில் இந்த பஸ் நிலையம் சிங்கப்பூரில் உள்ளது போன்று மிக அழகாக உள்ளது வெகு விரைவில் நீர்கொழும்பிலிருந்து கொழும்பு அதி சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்படும் ஆனால் கட்டணம் சிறிது அதிகமாக இருக்கும் இல்லாவிட்டால் இந்த பஸ் சேவையை தொடர்ந்து நடாத்த முடியாமல் போகும் என்றார்.

பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன உரையாற்றுகையில் எனது அமைப்பாளர் பதவியை பறிப்பதற்கு சிலர் முயற்ச்சி செய்தனர் முயற்சி செய்வதாக சில தரப்பினர் குறிப்பிடுகின்றனர். அரசியல் சுபாவம் இப்படித்தான் நான் யாருடைய காலையும் இழுத்து வீழ்த்தியது கிடையாது. மேல்மாகாண அமைச்சர் நிமலான்சாவின் கருத்திட்டத்தில உருவான இந்த பஸ்நிலையத்தின் வெற்றிக்காக நான் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறேன். இந்த தேர்தலில் எமது கட்சி வேட்பாளர்களிடையே கடும் விருப்பு வாக்கு போட்டி நிலவுகிறது எதிர்வரும் தேர்தல் வெற்றியின் பின்னர் நீர்கொழும்பு மாநகர சபைக்கு பொருத்தமான ஓருவரே மேயராக நியமிக்கப்படுவார் அது அந்த வேளையில் நடக்கும் என்றார்.

பிரதான பஸ் நிலையத்தின் பெயர் படிகத்தை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம திரை நீக்கம் செய்துவைத்தார். பஸ் நிலையத்தின் நாடாவை வெட்டி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் பசில் ராஜபக்சவின் சேவையை பாராட்டி நினைவு பரிசொன்று வழங்கப்பட்டது.

செய்தியாளர்- எம்.இஸட்.ஷாஜஹான்







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com