Sunday, October 23, 2011

இந்துசேவா சங்கத்தினர் கண்டி மல்வத்த பீடாதிபதி சந்திப்பு (வீடியோ இணைப்பு)

இந்து சேவா சங்கத்தின் இந்தியா நாட்டுக்கான பிரதிநிதி ஆர். இராதாகிருஷ்ணன் சுவாமி ஜீ யின் தலைமையில் இந்து சேவா சங்கத்தின் பிரதிநிதிகள் கண்டி மல்வத்த பௌத்த சமய பீடாதிபதி திபெட்டுவாவ சித்தார்த்த ஸ்ரீ சுமங்கள தேரருடன் மலையகத்தில் பௌத்த இந்து மக்களுக்கிடையே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இந்த விசேட சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய நல்ல சூழலைக் கருத்திற் கொண்டு பௌத்த, தமிழ் தோட்ட மக்களுக்கிடையிலான நெருக்கமான நட்புறவைக் கட்டி எழுப்புதற்கான வேலைத் திட்டங்கள் இந்து சேவா சஙக்த்தினர் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக தேரரிடம் இந்து சேவா சங்கப் பிரதிநிதிகள் விளக்கமளித்தார்கள்.

அத்துடன் பின் தங்கிய நிலையில் உள்ள தமிழ் தோட்ட மக்கள் தற்பொழுது நாட்டுப் பற்றுறுதி மிக்கவர்களாகவும் பல்வேறு சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபாடுடையவர்களாக மாறிவருகிறார்கள் எனவும் அங்கு பேசப்பட்டது.. குறிப்பாக 2600 ஆண்டு சென் புத்த ஜயந்த தினத்தை முன்னிட்டு இரத்ததானம் வழங்கதல், பொதுச் சிரமதானம், கல்வி அபிவிருத்தி என இந்து சேவா சங்கம் பல முன்மாதிரியான வேலைப்பணிகளில் ஈடுபட்டுள்ளன எனவும் சிங்கள தமிழ் மக்களிடையே ஒரு நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கிலேயே இவ் வேலைப் பணிகளை செய்து வருவதாகவும் மேலும் செய்யவுள்ளதாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்து.

அத்துடன் பௌத்த அமைப்புக்களும் மலைய தமிழ் மக்களுக்கு கூடுதலான சமூகப் பங்களிப்பை நல்கி வருகின்றன எனவும் தமிழ் சிங்கள உறவைக் கட்டி எழுப்புதற்குகுறித்து நல்ல விடயங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என அங்கு கலந்துரையாடப் பட்டன. இதில் இந்து சேவா சங்கத்தின் செயலாளர் ஏ. கே. எஸ். திருச்செல்வம், அருண்காந்த். லோகநாதன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இக்பால் அலி

No comments:

Post a Comment