வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பான நினைவுகூரும் நிதழ்வுகள்
வடமாகாண முஸ்லிம்கள் வடமாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டு ஒக்டோபர் மாதத்துடன் 21 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இந்த சம்பவம் ஆண்டுதோறும் வடமாகாண முஸ்லிம்களால் நினவு கூறப்படுகின்றது. இந்த ஆண்டும் நினைவுகூரும் நிகழ்வுகள் கொழும்பு ,கண்டி, புத்தளத்தில், மன்னார் , யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கறுப்பு ஒக்டோபர் 2011 நிகழ்வுகளின் கருப்பொருளாக முஸ்லிம் மீள்குடியேற்றத்தை ஊக்குவித்தல் ,தமிழ் ,முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் மீண்டும் புரிந்துணர்வையும் , ஒருமைப்பாட்டையும் ஊக்குவித்தல். வடமாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் போது மிகப்பெரிய கொள்ளை சம்பவமொன்றும் இடம் பெற்றுள்ளது அது வரலாற்றில் சரிவர பதிவு செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்துதல் ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு. சொற்பொழிவு , தமிழ் ,முஸ்லிம் சமூக கலந்துரையாடல் , இரத்ததானம்,விழிப்புணர்வு சுவரொட்டி பிரசாரம் ஆகிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் வாலிபர் கூட்டமைப்பு மேற்கொண்டுள்ளது
இதன் முதல் கட்டமாக விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன் , சொற்பொழிவு நிகழ்சிகள் இன்று நாளையும் புத்தளத்திலும் கண்டியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை அஷ்ஷெய்க் எஸ் .எம் மஸாஹிம் மற்றும் அஷ்ஷெய்க் மின்ஹாஜ் ஆகியோர் நடத்தவுள்ளனர் இதை தொடர்ந்து ,எதிர்வரும் ஞாயிற்றுகிழமை கொழும்பில் தமிழ் , முஸ்லிம் சமூக கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment