சமாதான நீதவான்கள் தொடர்பான தகவல்களைத் திரட்ட நடவடிக்கை.
நாடு முழுவதும் உள்ள சமாதான நீதவான்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்குறிய கணக்கெடுப்பை நடத்துவதற்கு நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.சமாதான நீதவான்களின் பல்வேறு சட்டவிரோத செயல்கள் காராணமாக நாளாந்தம் முறைப்பாடுகள் பதிவாகி வருவதாக அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவுத்துள்ளார்.
சில பிரதேசங்களில் சமாதான நீதவான்கள் என போலியாக செயற்படுகின்றவர்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமாதான நீதவான்கள் பற்றிய தரவுகளை திரட்டிய பின்னர் சமாதான நீதவான்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற விதம் தொடர்பில் ஆலோசனைத் தொகுப்பொன்றை வெளியிடவுள்ளதாகவும், சமாதான நீதவான்கள் தொடர்பான தரவுகளை வருடந்தோறும் புதுப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் நீதி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment