சஜித் பிரேமதாசாவின் சுயாதீன குழுக்களுக்கு எதிராக ஐ.தே.க சட்ட நடவடிக்கை
ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகபூர்வ பாடல் மற்றும் நிறம் என்பவற்றை சஜித் அணியினரின் சுயாதீன குழவினர் பயன்படுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அந்தக்கட்சி தயாராகி வருவதாக தெரிய வருகிறது. இம்முறை தேர்தலின்போது மாத்தறை மாநகரசபை, கோட்டை மாநகர சபை ஆகியவற்றில் போட்டியிடும் இந்த சுயாதீன குழக்கள் ஐ.தே.க.வின் கட்சி கீதம், நிறம் என்பவற்றை பயன்படுத்தி வருவதுடன் ஐ.தே.க.வின் முன்னாள் தலைவர்களுடைய படம்களையும் தமது பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிறம் மற்றும் கட்சியின் அடையாளம்களை குறிக்கும் எவற்றை பயன்படுத்தினாலும் ஐ.தே.க.வின் ஆதரவாளர்களை ஏமாற்ற முடியாது எனவும் கட்சியின் கீதம் நிறம், முன்னாள் தலைவர்களது படம்களை பயன்படுத்துவதற்கு எதிராக ஐ.தே.க நீதிமன்றம் மூலமாக தடையுத்தரவொன்றை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் கட்சி குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment