மாமனாரை வாளினால் வெட்டி கொலை செய்த நபருக்கு மரணதண்டனை
கூரிய வாள் ஒன்றினால் தனது மனைவியின் தந்தையான மாமனாரை வெட்டி கொலைசெய்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட நபரொருவருக்கு வடமத்திய மாகாண மே; நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இவருக்கும் தமது மனைவியின் தகப்பனான மாமனாருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி மருமகனின் வாள்வெட்டுக்கு மாமனார் இறந்துள்ளார். இக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஆரம்ப கட்ட வழக்கு விசாரணைகள் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றதுடன் மேலதிக விசாரணைகளுக்காக இவ்வழக்கு அனுராதபுரத்திலுள்ள வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இங்கு நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது குற்றவாளி மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment