வடக்கு,கிழக்குக்கு மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரம்.
வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு வரையறைக்குட்பட்ட பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல மேற்படி செய்தியை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் இதனை சுட்டிக் காட்டியுள்ளார்.
வட கிழக்கு மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டுமென வேண்டுதல்களும் முன்மொழிவுகளும் இருந்து வந்த நிலையில் தற்போது அரசு அதனை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது என்ற செய்தியை பலரும் நல்ல சமிக்கையாக கருதுகின்றனர்.
இதே சந்திப்பில், அண்மையில் களனியில் அமைச்சர் மேர்வின் சில்வா நடந்துகொண்ட விதம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது பதிலளித்த அமைச்சர் தகுதியுடைய பிரதிநிதிகளை தெரிவு செய்வது மக்களுடைய பொறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான நபர்களை மக்களே தெரிவு செய்வதாகக் கூறியுள்ள அவர் சில சந்தர்ப்பங்களில் வேட்பு மனு தயாரிக்கும்போதுகூட தகுதியான நபர்களை பெயரிடுவதில் சிக்கல் தோன்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment