கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்கு பொலிஸ் பாதுகாப்பு
இம்மாதம் 15 மற்றும் 16ம் திகதிகளில் நடைபெறவுள்ள கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்கு தீவிர பொலிஸ் பாதுகாப்பு வழங்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. தொலைபேசி அல்லது வேறு முறைகளைப் பயன்படுத்தி பரீட்சை மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இம்முறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை மோசடி குறித்து எதாவது முன்கூட்டிய தகவல்கள் இருப்பின் 011 24 333 42 . 011 23 22 322. 011 28 64 118 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அறியத்தருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பரீட்சார்த்திகள் தமது பரீட்சை இலக்கத்திற்குரிய பரீட்சை திகதி மற்றும் நேரம் தொடர்பான கால அட்டவணையை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பாரவையிடலாம்.
0 comments :
Post a Comment