பொலிஸ் காவலிலிருந்த மேலுமோர் சந்தேக நபர் மரணம். தண்ணியில் குதிச்சிட்டாராம்.
மொரட்டுவ பொலிஸ் பிரிவில் மோதர பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களில் ஒருவர் தண்ணீரில் குதித்து இறந்து விட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த நால்வரும் ரட்டியலகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வாள் மற்றும் மன்னா கத்தி என்பவற்றை கொல்கொட கங்கை பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளதாவதுஈ
ஆயுதங்களை மீட்டெடுத்து மொரட்டுவ பொலிஸ் நிலைய குழு விலங்கு பூட்டிய சந்தேகநபர் ஒருவரை அழைத்துக் கொண்டு படகில் திரும்பி வந்துக் கொண்டிருந்தபோது சந்தேகநபர் இரு கைகளாலும் பொலிஸாரை நோக்கி தாக்குதல் நடத்தினாராம்.
இதன்போது ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கங்கையில் விழுந்ததுடன் சந்தேகநபரும் கங்கையில் குதித்துவிட்டாராம்.
உடன் செயற்பட்ட பொலிஸ் குழு பொலிஸ் கான்ஸ்டபிளையும் சந்தேகநபரையும் காப்பாற்றியதாம்.
சந்தேகநபர் உடனடியாக பாணந்துறை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்தனராம்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பாணந்துறை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாராம்.
மொறட்டுவ மோதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனராம்.
0 comments :
Post a Comment