பாக்கிஸ்தான் எமது நெருங்கிய கூட்டாளி என்கிறது அமெரிக்கா
பயங்கரவாதத்திற்கெதிரான போரில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஒத்துழைக்கும் என தாங்கள் நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜே கார்னே, அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையேயான உறவு சிக்கலான நிலையில் இருந்தாலும், அந்நாடு தங்களுக்கு மிகவும் முக்கியமான நாடு என்று தெரிவித்துள்ளார். அல் குவைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கெதிராக போராட பாக்., ஒரு முக்கிய கூட்டாளி என்றும், தொடர்ந்து பாக்., தங்களுக்கு ஒத்துழைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment