நியாயம் கிடைக்காவிடின் B பிளேனை செயற்படுத்துவோம் - ஹிருனிகா எச்சரிக்கை
எனது தந்தையின் கொலை வழக்கில் நாட்டில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் நியாயம் கிடைக்காவிடின் தம்மிடம் உள்ள B திட்டத்தை (B plan) கையாளவுள்ளதாக கொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளான ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு விசாரணைக்கெனஇன்று கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு வருகைத் தந்த போதே அவர் ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
"எந்த பெறுமதியும் இல்லாத, மனம் திரிபுபட்ட போதை பைக்கற்றின் சுவைக்கு அடிமையான, மனித பிறப்பிற்கு இழுக்கு ஏற்படுத்தும் மனிதர்கள் மத்தியில், சிறந்த மனம்படைத்த நல்ல தலைவர் எமது நாட்டிற்கு இல்லாமல் போயுள்ளார்.
இந்த போராட்டத்தை எனது குடும்பம் சார்பில் நான் கொண்டு செல்வேன். விசாரணை நடைபெறும் ஒவ்வொரு நாளும் நான் நீதிமன்றம் வரவுள்ளேன். இந்த வழக்கை மூடிமறைக்க அனுமதிக்க மாட்டேன்.பொலிஸ் மேலதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்துள்ளதாக நாம் அறிந்தோம். அதனையிட்டு மிகவும் வருத்தப்படுகிறோம்.
இலங்கையில் சட்டம் என்ற ஒன்று உள்ளது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இந்த சட்டத்தின் ஊடாக எனது தந்தை சார்பில் நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். அப்படியில்லாவிடின் எம்மிடம் பீ பிளேன் உள்ளது அதனை நாம் நடைமுறைப்படுத்துவோம்." என்று ஹிருனிக்கா பிரேமச்சந்திர மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment