இலங்கைக்கும் வியாட்நாமிற்கும் இடையில் 8 ஒப்பந்தங்கள்
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி ட்ரேங் டென் செங்கிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்தே இந்த ஒப்பந்தகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன
இதில் தொழில், நிதி, கல்வி, பெட்ரோலியம், பாதுகாப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ஆகிய துறைகள் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஒப்பந்தத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச,அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், றிசாட் பதூதீன், வியட்நாம் பிரதிநிதிகள் உட்பட வியட்நாம் தேசிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் சீ சிங்க் ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர்.
இதேவேளை ,சர்வதேச ரீதியில் இலங்கைக்கு உதவிகள் தேவைப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உதவத் தயார் என வியட்நாம் ஜனாதிபதி ட்ரேங் டென் செங்க் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதியிடம் வியட்நாம் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் முதலீடு செய்ய தமது நாட்டு வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக வியட்நாம் ஜனாதிபதி கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment