நாடு முழுவதிலும் 716 பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகள்.
இலங்கை முழுவதும் 716 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் இருப்பதாக புகையிரத திணைக்களத்தின் தகவல் குறிப்பொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தகவல் குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது நாடு முழுவதும் உள்ள ரயில்வே கடவைகளில் 303 ரயில்வே கடவைகளே பாதுகாப்பானதாகும் 716 ரயில் கடவைகள் பாதுகாப்பற்றதாகும். கடந்த 2008ஆம்ஆண்டு 43 ரயில் விபத்துகள் இடமபெற்றன அந்த விபத்துக்களினால் 16 பேர் உயிரிழந்தனர் 17 பேர் காயமடைந்தனர் 2009இல் இடம்பெற்ற விபத்துக்களினால் 20 பேர் உயிரிழந்தும் 46 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ரயில் விபத்துக்களினால் 12 பேர் இறந்தனர் 65 பேர் காயமடைந்தனர் இதேவேளை பாதுகாப்பற்ற ரயில் கடவைகளினால் ஏற்படும் விபத்துகள் குறித்து பொதுமக்களும் வாகன ஓட்டுனர்களும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றனர்
0 comments :
Post a Comment