Monday, October 31, 2011

உலகின் 700வது கோடி குழந்தை பிலிபைன்ஸில் பிறந்தது

நேற்று நள்ளிரவு 12 மணியுடன் உலக சனத்தொகை 700 கோடியை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்குப் பிறந்த குழந்தை 700வது கோடி குழந்தை என அழைக்கப்படுகிறது

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நெரிசலான அரசு மருத்துவமனையில் உலகின் 700வது கோடி குழந்தை பிறந்ததுள்ளதென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு தானிகா மே கமாச்சோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஒரு பெண் குழந்தை என்பது விசேட அம்சமாகும். கேமிலி டலூரா, புளோரன்ட் கமாச்சோ என்ற தம்பதியினருக்கு பிறந்த 2வது குழந்தைதான் உலகின் 700கோடியாவது குழந்தையாகும்.

2.5 கிலோ உடல் எடையுள்ள இந்தப் பெண்குழந்தை நேற்று நள்ளிரவு மணிலாவின் ஜோஸ் பாபெல்லா நினைவு மருத்துவமனையில் பிறந்தது. தானிகா என்றால் காலை நட்சத்திரம் என்று பொருள். பெற்றோரையும், குழந்தையையும் ஐ.நா. அதிகாரிகள் சந்தித்து கேக் கொடுத்து கொண்டாடினர்.

இதேவேளை, இலங்கையிலும் 700வது கோடி குழந்தைகள் இரண்டு பிறந்துள்ளதாக கொழும்பு சிறுவர் ரிட்ஜ்வே வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு 12 மணி 1 செக்கனில் இரு குழந்தைகள் பிறந்ததாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. நேற்று நள்ளிரவு கொழும்பு காசல் வைத்தியசாலையில் 12.01 மணிக்குப் பிறந்த குழந்தை 700 கோடியில் இணைந்து கொண்ட இலங்கை குழந்தையாக இடம்பிடித்துள்ளது. கிரிபத்கொட - பமுனுவிலவைச் சேர்ந்த தனுஷிகா டிலானி என்ற தாய்க்கு இக்குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு பரிசு வழங்கும் நிகழ்வு இன்று காலை வைத்தியசாலையில் சுகாதார அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.

உலகின் 700 ஆவது கோடி குழந்தையை முதல் படத்திலும் இலங்கையில் பிறந்த குழந்தையை இரண்டாவது மூன்றாவது படங்களிலும் காணலாம்

No comments:

Post a Comment