Thursday, October 20, 2011

அங்கவீனமடைந்த 7 வயது மகனின் தலையைத் துண்டித்து படுகொலை செய்த தந்தை.

தனது அங்கவீனமடைந்த 7 வயது மகனின் தலையை வெட்டி படுகொலை செய்து அவனது உடலை துண்டு துண்டாக வெட்டிய தந்தையொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமரிக்க லூசியானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. திபோடோக்ஸ் எனும் இடத்தை சேர்ந்த ஜெரேமியாக் லீரைட் (30வயது) என்பவரே கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மகனான ஜோஜா லிரேட்டை இவ்வாறு கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளார். அவர் ஜோரி லிரேட்டின் துண்டிக்கப்பட்ட தலையை அவனது தாயாரான ஜெஸ்லின் லிரேட் பார்ப்பதற்காக தெருவில் கைவிட்டு சென்றுள்ளார்.

இந்தப் படுகொலைக்கான காரணம் தொடர்பில் அறியப்படவில்லை ஜோரி கடும் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியே தஞ்சமென்று இருந்துள்ளான். அவனுக்கு குழாய் மூலம் உணவு ஊட்டப்பட்டு வந்தது, அத்துடன் அவன் பேசவும் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. ஜோரியின் கரங்கள், கால்கள் உடல் பகுதி என்பன துண்டு துண்டாக வெட்டப்பட்டு வெவ்வேறு பிளாஸ்டிக் பைகளில் போடப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்

No comments:

Post a Comment