கணனி அறிவுடையோர் உள்ள நாடுகளில் இலங்கைக்கு 66 ஆவது இடம்.
இலங்கையில் கணனி அறிவுடையோர் 35 சதவீதமாக உள்ளதாகவும் , உலகளாவிய ரீதியில் கணனி அறிவுடையோhர் அதிகம் வசிக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கை 66 ஆவது இடத்தை பெற்றுள்ளதாவும் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் நிமால் ஆனந்த அத்துக்கோரள குறிப்பிட்டுள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 5 வருடம்களுக்கு முன்னர் இலங்கையில் 5 சதவீதத்தினரே கணனி அறிவுடையோராக இருந்தனர். அப்போது கணனி
அறிவுடையோர் வசிக்கும் நாடுகளில் இலங்கை 138 ஆவது இடத்தில் இருந்தது தற்போது 66 ஆவது இடத்தை பெற்றுள்ளதானது பெருமை தரும் விடயமாக உள்ளது. க.பொ.த. உயர்தரம் சித்தியடைந்தோரும், தொழில் வாண்மை தகமையுடையோரும் உயர் கணனி அறிவை கொண்டிருப்பது குறிப்பித்தக்கது.
0 comments :
Post a Comment