உள்ளுராட்சி மன்றங்களை பலப்படுத்தும் "புறநெகும" வேலைத்திட்டத்திற்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி 6 ஆயிரத்து 490 மில்லியன் ரூபாவை வழங்க, இணக்கம் தெரிவித்துள்ளது. பிரதேச மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள சேவைகளை செயற்திறனுடன் மேற்கொள்ளல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட பல அபிவருத்தி திட்டங்களை துரிதமாக அமுலப்படுத்த, "புறநெகும" வேலைத்திட்டமூடாக, நடவடிக்கை எடுக்கப்படும்.
இச்செயற்திட்டத்திற்கென 59 மில்லியன் அமெரிக்க டொலரை நிதி உதவியாக வழங்கவும், ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது. புறநெகும துரித அபிவிருத்தி திட்டத்தை, 4 ஆண்டுகளுக்கு அமுல்ப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. நிதி உதவி வழங்குவது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு, நிதியமைச்சில் இடம்பெற்றது.
No comments:
Post a Comment