நிர்வாண நிலையில் 62 வயது மாதுவின் சடலம் கண்டுபிடிப்பு
கிளிநொச்சி வட்டக்கச்சி குட்சன்வீதியில் வீடொன்றில் இன்று காலை நிர்வாணமான நிலையில் கிடந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அயலவர்களினால் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட மாது துரைராஜா லலிதா என இனம்காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் வட்டக்கச்சியைச் சேர்ந்த சுகந்தன் சுகந்திரன் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வன்னி பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான அநேகமான சம்பவங்களின் பின்னணியில் முன்னாள் புலிகள் உள்ளனர். புனர்வாழ்வு பெற்று வெளியேறிய புலிகள் இருவர் மூவர் கொண்ட குழுக்களாக இணைந்து களவு கொள்ளைகளில் ஈடுபட்டுவருவதுடன் தாம் இனம்;காணப்படுகின்றபோது இவ்வாறான கொலைகளை புரிகின்றனர் என்பது முன்னர் நடந்த பல விசாரணைகளின்போது வெளிவந்ததாக கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இலங்கைநெற் க்கு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment