கருக்கலைப்பு நிலையம் சுற்றிவழைப்பு 60 வயது பெண் உட்பட நால்வர் கைது.
ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் மிகவும் சூட்சுமமான முறையில் ஜா-எல பகுதியில் இயங்கிய கருக்கலைப்பு நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிசார், நடத்துனர் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர். கைதான நால்வரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்ததுடன் நீதிமன்றின் உத்தரவின் பேரில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கருக்கலைப்ப நிலையத்தை நடாத்தி வந்த 60 வயது பெண்ணும் அந்த நிலையத்துக்கு கருக்கலைப்புக்கு வந்திருந்த பெண்கள் உட்பட அங்கிருந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் .
குறித்த நிலையம் ஜா-எல வெலிகம்பிட்டிய கிறிஸ்துராஜ மாவத்தையிலுள்ள வீடொன்றில் மேல்மாடியில் இயங்கி வந்துள்ளது. இந்த கருக்கலைப்புக்காக வரும் நபரொருவரிடம் 18 ஆயிரம் ரூபா அறவிட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கும் ஜா-எல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இதேநேரம் இலங்கையில் 10 தொடக்கம் 14 சத வீதமான சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என குடும்ப சுகாதாரப் பிரிவு சுட்டிக் காட்டியுள்ளது. இவர்களில் 7 சத வீதமானோர் கர்ப்பம் தரிக்கின்றனர் எனவும் அது தெரிலித்துள்ளது.
இதேவேளை, பெண்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென நாடளாவிய ரீதியில் ஆலோசனை நிலையங்களை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக மகளிர் விவகார, சிறுவர் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வினையையும் ஆலோசனைகளையும் வழங்கும் பொருட்டே இந்த ஆலோசனை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment