Sunday, October 23, 2011

போதையில் உயிரிழந்த யுவதி. 60 வயது நபர் கைது.

போதை மாத்திரை உட்கொண்டு பரவசத்தின் உச்சத்துக்கு சென்றதால் ஒரு 15 வயது யுவதியின் உயிர் பறிபோனது. இதன் விளைவாக அந்த யுவதியின் நண்பியின் தகப்பனான 60 வயதான பிரயன் டொட்ஜென் பொலிசாரால் கைது கைது செய்யப்பட்டார். அவர் ஒரு கல்வித்துறை நிபுணராவார். தகப்பன் வீட்டில் இல்லாத இரவு நேரத்தில் அவரின் 14 வயது மகள் தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார். அப்போது அந்த வீட்டின் படுக்கை அறையில் இருந்த பரவசம் ஊட்டும் மாத்திரைகள் உட்பட இன்னும் பல வகையான போதை மாத்திரைகள் அங்கு வந்திருந்த விருந்தாளிகளின் கண்களில் பட்டுள்ளது. அதில் இரண்டு பரவச மாத்திரைகளை பார்ட்டிக்க வந்த 15வயது விருந்தாளியான இஸி ரீலி ஜோன்ஸ் என்பவர் உட்கொண்டுள்ளார். உடனே இவரின் நிலை மோசமானது. அவசர சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மேற்கு லண்டனில் உள்ள நொடிங்கில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் மரணத்தை தழுவினார். பிரயன் டொட்ஜெனின் மகள் உட்பட இன்னும் மூன்று பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையும் ஏற்பட்டது .

இந்த போதை மாத்திரைகளை எதற்காக வீட்டில் வைத்திருந்தார் ஏன் பாதுகாப்பின்றி வைத்திருந்தார்? என டொட்ஜெனின் இடம் பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com