Friday, October 7, 2011

லண்டனில் இலங்கைப் பெண்ணுக்கு 6 மாத சிறை

லண்டனில் மூன்று வருடங்களின் முன் தனது குடியேற்ற பரீட்சையினை எழுதுவதற்கு சட்டவிரோதமாக வேறொரு ஆணை அனுப்பிவைத்த இலங்கைப் பெண் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த மோசடிக்கு துணை போன ஆணுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரெஜினோல்ட் அந்தோனி என்ற குறித்த ஆண் இவ்வாறு பரீட்சைகளுக்கு தோன்ற பயன்படுத்தி 40 போலி சாரதி அனுமதிப்பத்திரத்தையும் அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறு குறித்த நபரை சட்டவிரோதமாக பரீட்சை எழுதி அனுப்பிவைத்த பெண் கிருஷ்ணதேவி தம்பிராஜா என இனங்காணப்பட்டுள்ளார்.

குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குறித்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று அவருடன் ஆங்கிலத்தில் கதைக்க முற்பட்ட போது அவரது கணவர் அவருக்கு அதனை மொழி பெயர்த்து கூறியுள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் பரீட்சை எழுதியிருக்க வாய்ப்பில்லை என சந்தேகித்த எல்லைப் பாதுகாப்பு முகவர் அமைப்பு, தொடர்ந்து நடத்திய விசாரணைகள் மூலம் பரீட்சைக்கு சமர்ப்பித்த சாரதி அனுமதி அட்டை போலியானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தொடர்ந்து விடுமுறையை கழிக்க கோருபவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான பரீட்சையிலேயே குறித்த பெண் இவ்வாறான மோசடியினை செய்துள்ளார்.

இவர் இவ்வாறு போலி சாரதி பத்திரத்தை பெற்று பரீட்சை எழுத அந்தோனிக்கு 500 ஸ்டேலிங் பவுண்ஸ்களை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து இவருக்கு இரண்டு வருடங்கள் பிற்போடப்பட்ட ஆறுமாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com