துப்பாக்கிச் சூட்டு சண்டையுடன் தொடர்புடைய மேலும் 5 சந்தேகநபர்கள் இன்று கைது
துமிந்த சில்வா எம்பி மற்றும் முன்னாள் எம்பி பாரத லக்ஷ்மன் ஆகியோரின் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சண்டையுடன் தொடர்புடைய மேலும் 5 சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு புறநகர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் குற்ற விசாரணை பிரிவினர் நேற்று ஒருவரை கைது செய்த நிலையில் இன்று மேலும் ஐவரை கைது செய்துள்ளனர்.
0 comments :
Post a Comment