சீன அரசுக்கு எதிர்ப்பு : 5 துறவிகள் தீக்குளிப்பு
சீனாவின் ஆதிக்க போக்கிற்கு கண்டனம் தெரிவித்து திபெத்திய துறவிகள் 5 பேர் தீக்குளித்துள்ளனர், இன்று ஒரே நாளில் 2 பேரும் கடந்த வாரத்தில் 3 பேரும் தீக்குளித்துள்ளனர் என்று சீன அரசு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிடம் இருந்து தனி அதிகாரம் கேட்டு திபெத்திய பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். அவ்வப்போது எதிர்ப்புகள் கிளம்புவதும், பின்னர் தானாக அடங்குவதுமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2 வாரத்தில் இதுவரை 5 துறவிகள் தங்களுக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். நேற்று தீக்குளித்த 2 பேரும் 18 முதல் 22 வயதுள்ளானவர்கள். தென்மேற்கு சீனாவின் சிக்குவானில் அபா என்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.
இது குறித்து அந்நாட்டு செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் இருவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்ப்பட்டு வருகிறது என்றார். கடந்த சில மாதங்களாக அபா என்ற பகுதியில் திபெத்தியர்கள் தொடர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தற்போது வலுப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
...............................
0 comments :
Post a Comment