நேருக்கு நேர் இரு பஸ்கள் மோதியது. 50 காயம்.
குருநாகல்-கொக்கரல்ல பிரதான வீதியில் கரன்வௌ நெசனல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில், 50 பேர் காயமடைந்தனர். இரண்டு தனியார் பஸ் வண்டிகள், நேருக்கு நேர் மோதுண்டதில், இந்த விபத்து நேர்ந்தது. கொழும்பிலிருந்து மெதிரிகிரிய நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்வண்டி மற்றும், கதுருவெலையிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த பஸ் வண்டியுடன், நேருக்கு நேர் மோதுண்டது.
காயமடைந்தோர், கொக்கரல்ல, பொல்கொல்ல, குருநாகல் ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 33 பேர், குருநாகல் வைத்தியசாலையயில் அனுமதிக்கப்பட்டுள்ளாக, வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் எம்.டி.எஸ். ராஜமந்திரி தெரிவிக்கிறார். இவர்களில் 20 ஆண்கள் மற்றும் 11 பெண்கள் அடங்குவதுடன், மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிக்கிறார். இரு பஸ் வண்டிகளும், வேகமாக சென்று கொண்டிருந்த போதே, விபத்து இடம்பெற்றதாக, கொக்கரல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, றாகலையிலிருந்து ஹைபொரெஸ்ட் வரை சென்று கொண்டிருந்த பஸ் வண்டி, ஹைபொரெஸ்ட் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில், 10 பேர் காயமடைந்தனர். பஸ் வண்டி, வீதியை விட்டு விலகி சென்று, மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது. காயமடைந்தோர், ஹைபொரஸ்ட் மற்றும் நுவரெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment