50 கிலோக்கிராம் கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
கற்பிட்டி கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 4 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசலா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களிடமிருந்து 18 கிலோகிராம் ஹசீஸ் போதைப் பொருளும், 10 கிலோகிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் கேரளாவில் இருந்து 50 கிலோக்கிராம் கஞ்சாவினை 40 பக்கற்றுக்களில் கொண்டுவந்துள்ளார்கள் என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.இவர்கள் இருவர் கல்பிட்டியைச் சேர்ந்தவர்கள் என்றும் இருவர் கடவத்தையைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர.
0 comments :
Post a Comment