மாமியாரின் தலையை பொல்லால் தாக்கி கொலை செய்த மருமகனுக்கு 5 வருட கடூழியச்சிறை
தனது மனைவியின் தாயாரை பொல்லொன்றினால் தலையில் தாக்கி கொலைசெய்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நபருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற சிரான் குணரத்ன ஐந்து வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தார். அத்துடன் ஐயாயிரம் ரூபா அபராதமும் நீதிபதியினால் விதிக்கப்பட்டது.
வடக்கு கதிராணை பிரதேசத்தை சேர்ந்த நிமல் சஞ்சீவ பெரேரா என்பவருக்கே கடூழிய சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.
2007 மே மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியில் கதிராணை கட்டுவா கெலேவத்தையில் வைத்து எம்.லீலாவதி (50வயது)என்பவரின் தலையை பொல்லொன்றினால் தாக்கி கொலை செய்ததாக பிரதிவாதி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
1 comments :
கொலையாளிக்கு ஐந்து வருடம் சிறைதானா இப்படியே போனால் நாட்டில் கொலையாளிகள் அதிகரித்து விடுவார்களே?
Post a Comment