சனல் 4 காணொளிக்கும் பாதுகாப்பு அமைச்சின் காணொளிக்கும் ஐரோப்பாவில் இன்று போட்டி
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இன்று (12) காண்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நேரப்படி இன்று புதன்கிழமை பகல் ஒரு மணிக்கு இந்த ஆவணப்படம் காண்பிக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் ஆவணப்படம் குறித்து விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் அரச சார்பற்ற மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்பினர் இணைந்து இந்த ஆவணப்படத்தை திரையிடவுள்ளனர்.
இதேவேளை, சனல் 4 ஆவணப்படத்திற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள நம்ப முடியாத பொய்கள் எனும் ஆவணப்படம் ஐரோப்பிய நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில் காண்பிக்கப்படலுள்ளதாக தெரியவருகிறது.
பிரித்தானியாவுக்கான இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க மற்றும் தூதரக அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment