420 பேரை தெரிவு செய்ய தேர்தலில் 6488 பேர் போட்டி
எதிர்வரும் சனிக்கிமை நடைபெறவுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தலில் 420 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர். அதற்கான 6ஆயிரத்தி 488 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். பிரதான கட்சிகள் உட்பட 160 அரசியல் கட்சிகளும் 104 சுயேட்சைக்குழுக்களும் தேர்தலில் களம் இறங்கியுள்ளன.
கொழும்பு மாநகர சபையில் 9 அரசியல் கட்சிகளும் 10 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இங்கு 53ஆசனங்களுக்காக 1021வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
புதன்கிழமை நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் இன்று அதிகாலை முதல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட பந்தல்கள், வளையங்கள் , சுவரெட்டிகள் அனைத்தும் விசேட பொலிஸ் குழுக்களினால் அகற்றப்பட்டு வருகின்றன.
தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைந்ததை அடுத்து போட்டி அதிகாமாக நிலவுகின்ற கொழும்பு, கண்டி, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன
அதிகாரிகள் மற்றும் கட்சிகளினால் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டால் உடனடியாக அறிவிப்பதற்கு தேர்தல்கள் திணைக்களத்தில் விசேட கருமபீடம் ஒன்றும் அமைக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் சட்ட விதிகளை மீறிய 189 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 42 வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரில் 91 பேர் சட்டவிரோத தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் ஏனையவர் சிறு சிறு வன்முறைச் சம்பவங்களுக்குமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் மீட்கப்பட்ட வாகனங்கள் அனைத்தும் சுவரொட்டி ஒட்டுவதற்காகச் சென்றவையாகும் எனவும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்தின தெரிவித்துள்ளார்.
நிதியான தேர்தலை குழப்பும் நோக்கில் யார் செயற்பட்டாலும் கடுமையான நடிவடிக்கை எடுக்கப்படும் என்று சிரேஷஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment