உள வளர்ச்சி குறைபாடுடைய தனத இரு மகள்;மாரையும் 41 வருடம்களாக சிறிய அறையோன்றில் அடைத்து வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்த 80 வயது தந்தையொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடந்த வாரம் ஆஸ்திரியாவில் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரியா கிராமமான சென்.பீற்றர்ஆம் ஹார்ட் எனும் இடத்தை சேர்ந்த மேற்படி தந்தை 1970 ஆம் ஆண்டு 12 வயது மற்றும் 4 வயது இருந்த போது அவர்களை அறைக்குள் அடைத்து வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்த ஆரம்பித்துள்ளார் தற்போது அந்த மகள்மாரின் வயது 53 வயத மற்றும் 45 வயது ஆகும் அத்துடன் அவர்களை அடித்து சித்திரைவதையும் செய்துள்ளார்.
அத்துடன் அவர் தனது மனைவியையும் அடைத்து வைத்திருந்து பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி உட்படுத்தி வந்துள்ளார். அவரது மனைவி 2008 ஆம் ஆண்டு மரணமானார் தப்பிச் செல்ல முயன்றால் படுகொலை செய்வதாக அவர் தனது மகள்மாரை அச்சுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் அண்மையில் மேற்படி இரு மகள்மாரும் தனத தந்தையை எதிர்த்துப்போராடி வெளியேறுவது என்ற முடிவுக்க வந்துள்ளனர். இதன்பிரகாரம் சம்பவ தினம் மகள்மாரில் ஒருவர் தந்தையின் தலையில் பொல்லால் தாக்கியுள்ளார் அதனால் அவர் படுகாயமடைந்தார்.
இந்நிலையில் இரு நாட்கள் கழித்து வயோதிபரான தந்தை காயமடைந்துள்ளமை குறித்து உள்ளுர் சேவை அதிகாரிகளுக்கு சகோதரிகள் அpவித்துள்ளனர். இதனையடுத்தே மேற்படி நபர் கடந்த 40 வருடம்களாக தனது மகள்மாரை சிறைவைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணைகளின்போது தந்தை தனது நண்பர் ஒருவரை வீட்டுக்கு அழைத்துவந்து அவருடன் இணைந்து மகள்மாரை துஷ்பிரயோகம் செய்த சம்பவங்களும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஆஸ்திரிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment