சனல்4 வின் கொலைக்களம் : ஐரோப்பிய பாராளுமன்றில் ஒளிபரப்ப ஏற்பாடு.
புலிகளிடம் பணம்பெற்றுள்ளர் : திவய்ன குற்றச்சாட்டு
சனல் - 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக் களம் வீடியோ ஆவணப்படத்தை மூன்று அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து, எதிர்வரும் 12 ஆம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் திரையிட தீர்மானித்துள்ளன. இதற்கு இலங்கை அரசாங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. செனல் 4 தொலைக்காட்சியின் விவரணப்படத்தை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வெளியிடுவதற்காக ஐரோப்பாவில் உள்ள புலிகளின் வலையமைப்பு, குறித்த நிறுவனங்களுக்கு மூன்று மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளதாக திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர், கலந்துரையாடல்களை நடத்துவதற்கு, செனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெலம் மெக்ரே, கிறீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மூவர், பல அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக செனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் விவரணப்படம் திரையிடப்பட உள்ளமை குறிப்பிடதக்கது.
சர்வதேச மன்னிப்புச் சபை, இண்டர்நேஷனல் கிரைசீஸ் குறுப், மனித உரிமை கண்காணிப்பகம் என்பனவே இந்த ஆவணத் திரைப்படத்தை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் திரையிட தீர்மானித்துள்ளன.
0 comments :
Post a Comment