இலங்கையில் 4 மணிக்கொருவர் விபத்தில் பலி! வருடத்திற்குள் 2400 பேர் மரணம்.
இலங்கையை பொறுத்தமட்டில் வீதிவிபத்துக்கள் நகர பகுதியிலும் விவசாய விபத்துக்கள் கிராமிய மட்டம்களிலும் இடம்பெறுகின்றன. வீதி விபத்துக்களினால் ஒவ்வொரு 4 மணித்தியாலத்திற்கு ஒருவரும் வருடத்திற்கு 2400 பேரும் மரணமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் பிரகாரம் இலங்கை சனத்தொகையில் 10 வீதமானோர் ஊனமுற்ற நிலையில் இருப்பதாகவும் அதில் 99 வீதமானோர் முதுகெலும்பு குழாய் விபத்து காரணமாக ஊனமுற்றவர்களாவர் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது முதுகெலும்பு குழாய் விபத்தினால் உலகளாவிய ரீதியில் வருடத்திற்கு 80 மில்லியன் பேர் ஊனமுற்றவர்களாகின்றனர். அதில் 80வீதமானோர் 25 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்டவர்களாவர். இவ்வாறு ஊனமுற்றவர்கள் நிரந்தரமாக ஊனமுற்றவர்களாக இல்லாமல் பகுதியான ஊனமுற்றவர்களாக மாறுவதற்கான சாத்திய கூறுகள் தென்படுகின்றன.
இந்த விபத்து உயர்ந்த கட்டிடம், மரம், கூரையிலிருந்து விழுதல் மற்றும வாகன விபத்துக்கள், விளையாட்டு போட்டிகளின் போது ஏற்படுகின்ற முறிவுகளினால் இந்த நிலைமை ஏற்படுகின்றது இவ்வாறான விபத்துக்களினால் முதுகெலும்பு குழாயிற்கு சேதம் ஏற்பட்டு உடையும் போது மீண்டும் பழைய நிலைக்கு செல்ல முடியாது இவ்வாறான ஊனமுற்றோரினால் குடும்பத்திற்கு மாத்திரமின்றி நாட்டிற்கும் பொருளாதார அழுத்தம் ஏற்படுகின்றது இந்த நோயாளிகளுக்கு புணர்வாழ்வளிப்பதற்கு ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலம் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது
0 comments :
Post a Comment