ஆண்களை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 3 பெண்கள் கைது!
ஆண்களை மயக்க மருந்து கொடுத்து கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவர்களிடமிருந்து விந்தணுக்களை திருடிய குற்றச்சாட்டில் 3 பெண்களை கொண்ட குழுவை சிம்பாவே பொலிசார் கைது செய்துள்ளனர். கவேரு நகரில் வாகனமொன்றில் சென்ற வேளை இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வாகனத்திலிருந்து, உபயோகிக்கப்பட்ட 33 கருத்தடை உறைகள் கைப்பற்றப்பட்டன.
இந்த பெண்கள் ஹரேரே, மஷோனாலான்ட் மற்றும் கவேரு ஆகிய நகர்களில் தெருவில் செல்லும் ஆண்களை தமது வாகனத்தில் ஏற அனுமதித்த பின்னர் அவர்களை மயக்க மருந்து கொடுத்து கடத்தியுள்ளனர். குறிப்பிட்ட ஆண்கள் மயக்கம் தெளிந்ததும் அந்த பெண்கள் அவர்களை துப்பாக்கி முனையில் அச்சறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். அந்த ஆண்களிடமிருந்து விந்தணுக்களை சேகரித்த பின்னர் அந்ப்பெண்கள் அவர்களை தெருவோரத்தில் கைகவிட்டுவிட்டு சென்றுள்ளனர்.
ஆண்களின் விந்தணுக்கள் மூலம் தாம் அதீத மந்திர ஆற்றல்களை பெறமுடியும் என்ற நம்பிக்கையிலேயே இந்த பெண்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் ஸோபி நொக்வரா என்ற 26 வயது யுவதியும் உள்ளடங்குகிறார். ஆண்களை கடத்தி சென்று வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக பாதசாரியொருவரை வாகனத்தால் மோதி பலியாவதற்கு காரணமாக இருந்தமை தொடர்பான பிறிதொரு வழக்கும் அவர்கள் மீது பதிவாகியுள்ளது
0 comments :
Post a Comment