தீபாவளி பண்டிகையையொட்டி, புனர்வாழ்வளிக்கப்பட்ட 367 முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்கள், சமூகமயப்படுத்தப்படவுள்ளனர். எதிர்வரும் இரு மாதங்களுக்குள் புனர்வாழ்வு செயற்பாடுகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியுமென, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவிக்கிறார்.
கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில், பிரதமர் டி.எம். ஜயரட்ன தலைமையில், மேற்படி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர். இது தொடர்பான வைபவம், அன்றைய தினம் காலை இடம்பெறும். இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment