எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சிலருக்கு பரிசு வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி முன்னாள் போராளிகள் 350 பேர் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிகந்த, சேனபுர, வவுனியா ஆகிய புனர்வாழ்வு முகாம்களில் தங்கியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களே விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 25 முதல் 35 வயதானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் விடுவிக்கப்பட்டதன் பின்னர் மேலும் 700 முன்னாள் உறுப்பினர்கள் மாத்திரமே எஞ்சியிருப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
No comments:
Post a Comment