போலி முத்துக்களை 35 இலட்சம் ரூபாவிற்கு விற்க முயன்ற ஐவர் கைது
போலி முத்துக்களை 35 இலட்சம் ரூபாவிற்கு விற்க முயன்ற சந்தேக நபர்கள் ஐவரை ஹபரணை பொலிசார் கைதுசெய்துள்ளனர். குறித்த சட்டவிரோத செயல்தொடர்பாக ஹபரணை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே நேற்று முன்தினம் இரவு இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஹபரணை பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உப்புவெளி மற்றும் அழுத்ஓயா பிரதேசம்களை சேர்ந்த ஐவர் ஹபரணை பகுதியில் உள்ள ஒருவருக்கு குறித்த போலி முத்துக்களை விற்பதற்காக ஹபரணை தம்புல்லை பிரதான வீதியில் உள்ள ஒரு ஹேட்டலில் வைத்து தயாரான போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து போலி முத்துக்கள் மிPட்கப்பட்டதுடன் ஹபரணை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment