தொம்பே பொலிஸ் நிலைய தாக்குதல் தொடர்பில் இதுவரை 33 பேர் கைது
தொம்பே பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல் தொடர்பில் மேலும் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளை அடுத்த இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்பகனவே 25 பேரைக் கைது செய்திருந்தது. இதனை அடுத்து கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. முதலில் கைது செய்யப்பட்ட 25 சந்தேக நபர்களும் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து தொம்பே பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐந்து பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment