இலங்கை திரும்புதல் எனும் தொனிப்பொருளில் 300 வருட வரலாற்று கண்காட்சி. (வீடியோ இணைப்பு)
பிரித்தானிய நூலகம் மற்றும் பிரிடிஷ் கவுன்சிலின் ஏற்பாட்டில் இலங்கை அருங்காட்சியத்தின் இணை அனுசணையுடன் நடத்தப்படும் இலங்கைக்கு மீளத்திரும்புதல் எனும் தொனிப்பொருளிலான கண்காட்சி நேற்று பிரிடிஷ் கவுன்ஸிலின் இலங்கைக்கான பணிப்பாளர் டொனி புரக்டர் தலைமையில் நேற்று கண்டி நகர நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழிவில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகெடுவ, மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கண்டி மாநகர முதல்வர் மகேந்திரா ரத்வத்த மற்றும் பிரிடிஷ் கவுன்ஸில் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கண்காட்சி கண்டியில் இம்மாதம் 24 ம் திகதி முதல் அடுத்த மாதம் நவம்பர் 6 திகதி வரை நடைபெறவுள்ளது.
0 comments :
Post a Comment