மூதூரின் 3ஆசிரியர்கள் ஜனாதிபதி மாளிகையில் கௌரவிப்பு
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் கௌரவிப்பு நிகழ்ச்சிகள் இன்று இடம்பெற்றன. இதன் ஒரு அங்கமாக பிரதிபா பிரபா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முதூர் பிரசேத்தின் 3 ஆசிரியர்கள் இன்று விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேற்படி நிகழ்வு இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதோடு திஃஅல்-ஹிலால் தேசிய பாடசாலை அதிபர் எம்.கபூர் மற்றும் திஃஆயிஸா வித்தியாலய அதிபர் ஜே.எம்.மாஹிர் மற்றும் திஃஅஸ்ரப் வித்தியாலய அதிபர் எம்.முபாறக்; ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதேநேரம், கிண்ணியா பிரதேச செயலயளர் ஏ.முபாறக் தனது சுயவிருப்பின் பெயரில் இன்று வியாழக்கிழமை முதல் கிழக்கு மாகாண சபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது உதவி தவிசாளராக கடமையாற்றிய சீ. கிருஸ்னேந்திரன் பதில் செயலயளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சு இந்த இடமாற்றத்தினை செய்துள்ளது. இவர் மிக நீன்ட காலமாக செயலயளராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment