கல்லோயா அளுத்ஓயா பிரதேசத்தில் வெடி பொருட்களுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அளுத்ஓயா பொலிஸ் காவலரணில் சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றில் சோதனை மெற்கொண்ட போது இந்த வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன. 990 கிராம் அமோனிய சல்பேட், ஜெலட்நைட் குச்சி, ஒரு தொகை ரவைகள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
புதையல் தோண்டுவதற்காக இச்சந்தேக நபர்கள் சென்று கொண்டிருந்ததாக கல்லோயா பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
No comments:
Post a Comment