இன்னொருவருக்கு சொந்தமான கடவுச்சீட்டில் தனது புகைப்படத்தை உள்ளிட்டு விமானம் மூலமாக வெளிநாடு செல்ல முயன்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட பெண்ணொருவருக்கு நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் 10 வருட காலம் ஒத்தி வைத்த இரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபாஅபராதமும் விதித்துள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவருக்கே ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்தப்பட்டுள்ளது. பிரதி வாதி 2007 டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி இன்னொருவருக்கு சொந்தமான கடவுச்சீட்டில் தனது புகைப்படத்தை உள்ளிட்டு தயாரிக்கப்பட்டதை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயன்றுள்ளார்.
குற்ற புலனாய்வு தினைக்களத்தின் விமான நிலைய பொலிசார் இவர் மீதான வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment