இமாசல பிரதேச மாநிலம் லாகவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டங்களுக்கு இடையே, இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-29 ரக போர் விமானம் நேற்று பயிற்சியில் ஈடுபட்டது.
இரவு நேர பயிற்சி நடந்தபோது, திடீர் என விபத்துக்குள்ளானது. லாகவுல் பள்ளத்தாக்கு பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் பயணம் செய்தவர்களின் விவரம் தெரியவில்லை. இன்று பகல் முழுவதும் தேடுதல் வேட்டையை நடத்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்களும் வெறுமனே திரும்பின. இதையடுத்து, சுற்றியுள்ள மலைப்பகுதிகளிலும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment