கிழக்குமாகாண அபிவிருத்திக்கென 2700 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
பொருளாதார அபிவிருத்தி அமைச்சால், கிழக்கு மாகாண திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கென 2,700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுகளின் அபிவிருத்திப் பணிகளுக்ககாக 700 மில்லியக் ரூபாவும், சேருவில் மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் அபிவிருத்தித் திட்டங்களுக்ககாக 400 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தெவி நெகும, கம நெகும மற்றும் சமுர்த்தி ஆகிய நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக இந் நிதி செலவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந் நிதியானது மாவட்ட செயலகங்களின் ஊடாக பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு வழங்கப்படவுள்ளதுடன், இதன்மூலம் பிரதேசங்களி்ன் உட்கட்டமைப்பு வசதிககள், சமூக அபிவருத்தி மற்றும் யுத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மேற்கொள்ள வேண்டிய உடனடி அபிவிருத்தி் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.
0 comments :
Post a Comment